1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamil Nadu IAS Officer KP Karthikeyan Deputed to Centre: 3 Officers Move to Delhi, 3 Return to State in Last 5 Months

டெல்லிக்குச் செல்லும் தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள்: கடந்த 5 மாதங்களில் 3 பேர் டெல்லிக்கு இன், 3 பேர் அவுட்!

தமிழக ஐஏஎஸ்
தமிழகத்தை சேர்ந்த 2014 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான கே.பி. கார்த்திகேயன், டெல்லியில் உள்ள பொருளாதார விவகாரங்கள் துறையின்  துணைச் செயலாளராக மத்திய பணியமர்த்தல் திட்டத்தின் கீழ் 4 ஆண்டுகள் காலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார். பேரூராட்சிகள் இயக்குநராக பணியாற்றி வந்த இவரை உடனடியாக விடுவிக்குமாறு மத்திய அரசு தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, இவர் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராகவும், எல்காட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
கடந்த ஐந்து மாதங்களில் தமிழகத்திலிருந்து வினீத் எஸ், பிரசாந்த் எம்.எஸ் மற்றும் கே.பி. கார்த்திகேயன் ஆகிய 3 ஐஏஎஸ் அதிகாரிகள் மத்திய அரசு பணிக்கு சென்றுள்ளனர். அதேவேளையில், மத்திய பணியில் இருந்து 3 அதிகாரிகள் தமிழகத்திற்குத் திரும்பியுள்ளனர். 1999 பேட்ச் மூத்த அதிகாரியான ஆஷிஷ் சட்டர்ஜி, நவோதயா வித்யாலயா சமிதி ஆணையராக பணியாற்றிய ராஜேஷ் லக்கோனி மற்றும் வெளிநாட்டுப் பணியில் இருந்த பி. விஷ்ணு சந்திரன் ஆகியோர் தமிழகத்திற்குத் திரும்பியுள்ளனர். 
 
இதில் ராஜேஷ் லக்கோனி TNPDCL தலைவராகவும், விஷ்ணு சந்திரன் எல்காட் எம்.டி-யாகவும் பொறுப்பேற்றுள்ளனர். 1999 பேட்ச் சீனியரான ஆஷிஷ் சட்டர்ஜிக்கு தமிழக அரசு என்ன முக்கியப் பொறுப்பு வழங்கப்போகிறது என்பதுதான் தலைமைச் செயலகத்தின் தற்போதைய முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஹெட்மாஸ்டர் பதவி உயர்வு: டெட் தேர்வு கட்டாயமா? அரசு விளக்கம்!