1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. New Luxury Cruise Service to Begin in Puducherry From November 20

நவம்பர் 20-ஆம் தேதி முதல் சொகுசு சுற்றுலா கப்பல் இயக்கம்.. 150 பயணிகள் பயணம் செய்யலாம்...

புதுச்சேரி சுற்றுலா
புதுச்சேரி சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், நவீன வசதிகளுடன் கூடிய பிரம்மாண்ட சொகுசு சுற்றுலா கப்பல் கடல் பயணம் வரும் நவம்பர் 20-ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. 
 
குஜராத்தில் இயக்கப்பட்டு வந்த இந்த கப்பல் புதுச்சேரி சுற்றுலா துறைக்காக கொண்டுவரப்பட்டு, தற்போது இறுதிக்கட்ட மேம்பாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 100 அடி நீளம், 40 அடி அகலம் மற்றும் 50 அடி உயரம் கொண்ட இந்தக் கப்பலில், ஒரே நேரத்தில் 150 பயணிகள் வரை அமர்ந்து பயணம் செய்யும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
 
முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ள இந்த கப்பலின் அனைத்து பகுதிகளிலிருந்தும் கடலின் அழகை முழுமையாக ரசிக்கும் வகையில் சுற்றிலும் கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், மேல் தளத்தில் இயற்கைச் சூழலை ரசிக்கும் விதமாக திறந்தவெளி பூங்காவும், பயணிகளுக்காக உணவகம் மற்றும் நவீன கழிப்பறை வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன. 
 
தினசரி காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை மூன்று முறை இயக்கப்படும் இந்த கப்பல், கடலுக்குள் 5 நாட்டிக்கல் மைல் தொலைவு வரை சென்று வரும். இதில் பயணிக்க விரும்பும் சுற்றுலாப் பயணிகள் இணையவழி மூலமாக முன்கூட்டியே முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
ஆசிரியர்களுக்கான சிறப்பு டெட் தேர்வு.. பள்ளிக்கல்வி துறையின் முக்கிய அறிவுறுத்தல்கள்