கோவை மக்களுக்கு சூப்பர் செய்தி.. சிறுவாணி அணை நீர்க்கசிவை ரூ.18 கோடி.. அதிரடி அரசாணை...
கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை தடுக்கவும், அணையின் கட்டமைப்பை வலுப்படுத்தவும் தமிழ்நாடு அரசு ரூ.18 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது.
பாலக்காடு மாவட்டம் முத்திக்குளம் பகுதியில் அமைந்துள்ள சிறுவாணி அணையில், கடந்த சில மாதங்களாக சுவர் வழியாக நாளொன்றுக்கு (சுமார் 1.5 கோடி லிட்டர் வரை நீர் கசிவு ஏற்பட்டு வந்தது. பாதுகாப்பு காரணங்களுக்காக நீர்மட்டம் 44 முதல் 44.50 அடியாக கட்டுப்படுத்தப்பட்டதால், கோடை காலத்தில் கோவைக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவானது.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், கேரள நீர்ப்பாசன துறை மற்றும் மத்திய நீர் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் இணைந்து நடத்திய ஆய்வில், அழுத்தப்பட்ட சிமெண்ட் கிரவுட்டிங் முறையில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள பரிந்துரைக்கப்பட்டது. இதன்படி, கேரள நீர்ப்பாசனத்துறை அளித்த ரூ.18 கோடி மதிப்பீட்டை ஏற்று அரசு நிதி ஒதுக்கியுள்ளது.
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் இந்த விரைவான நடவடிக்கையால், சீரமைப்பு பணிகள் முடிந்ததும் நீர்மட்டம் மீண்டும் 49.50 அடி வரை உயர்த்தப்பட்டு, 650 மில்லியன் கன அடி முழு கொள்ளளவுடன் கூடுதலாக 125 மில்லியன் கன அடி நீரைச் சேமிக்க முடியும். இதன் மூலம் கோவை மக்களுக்குத் தடையற்ற குடிநீர் கிடைப்பது உறுதி செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

