இந்தியா மற்றும் ரஷ்யாவை இருள் சூழ்ந்த சீனாவிடம் இழந்துவிட்டோம்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளையும் இருள் சூழ்ந்த சீனாவிற்கு இழந்துவிட்டதாக கூறியிருப்பது உலக அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் அளித்த நேர்காணலில், ரஷ்யா மற்றும் சீனா உடனான தனது உறவுகளை பற்றி விவாதித்த அவர், உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர, ரஷ்யாவுடன் ஒரு ஒப்பந்தம் செய்திருக்கலாம் என்றும், இதன் மூலம் உலக அளவில் அமெரிக்கா இன்னும் வலுவான நிலையில் இருந்திருக்கும் என்றும் குறிப்பிட்டார். ஆனால், "இப்போது, அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய மூன்று நாடுகளும் மிக மோசமான உறவில் இருக்கின்றன" என்று அவர் வருத்தம் தெரிவித்தார்.
மேலும் "இந்தியா மற்றும் ரஷ்யாவை, இருள் சூழ்ந்த சீனாவிற்கு இழந்துவிட்டோம். இது ஒருபோதும் நடக்க அனுமதிக்கப்பட்டிருக்கக் கூடாது" என்று அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்க அதிபரின் இந்த கருத்துக்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,
Edited by Mahendran