1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 22 மே 2025 (07:55 IST)

பற்றி எரிகிறது பாகிஸ்தான்.. தண்ணீர் பிரச்சனையால் அரசுக்கு எதிராக போராட்டம்.. 2 பேர் பலி..!

இந்தியா - பாகிஸ்தான் மோதல் காரணமாக, சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா தற்காலிகமாக ரத்து செய்த நிலையில், பாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீர் தடைபட்டு உள்ளது. இதன் காரணமாக, பாகிஸ்தானில் வேளாண்மை மற்றும் குடிநீருக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
 
இதையடுத்து, அந்த பகுதியில் உள்ள மக்கள் பொதுவாக சாலைமறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்வதற்கு, பாகிஸ்தானின் தவறான அணுகுமுறையையே காரணம் என குற்றம் சாட்டி, பாகிஸ்தான் அரசுக்கு எதிராக மக்கள் திடீரென குதித்து எழுந்து போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
இந்த போராட்டத்தில் பல கட்டடங்கள் தீவைக்கப்பட்டதாகவும், போராட்டத்தை கட்டுப்படுத்த வந்த போலீசார் மீது பொதுமக்கள் கற்கள் வீசும் செயல்களில் ஈடுபட்டதால், பல போலீசார் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்த போராட்டத்தில் இரண்டு பேர் உயிரிழந்ததாகவும், பல கட்டிடங்கள் தீயால் சேதமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இந்த நிலையில், தண்ணீர் பற்றாக்குறையை தீர்ப்பதற்காக பாகிஸ்தான் அரசு அவசர நடவடிக்கை எடுத்து, ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Edited by Siva