இந்தியா தராவிட்டால் என்ன? பாகிஸ்தானுக்கு நாங்கள் தண்ணீர் தருவோம்: சீனா
பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு, இந்தியா–பாகிஸ்தான் இடையே இருந்து வந்த சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்ட நிலையில், பாகிஸ்தான் தற்போது தண்ணீருக்கு தள்ளாடி வருகிறது.
இந்த நிலையில், "பாகிஸ்தானுக்கு நாங்கள் தண்ணீர் தருவோம்" என சீனா முன்வந்துள்ளது என்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா சிந்து நதிநீரை நிறுத்திய நிலையில், பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க சீனா முன்வந்துள்ளதாகவும், அதற்காக முகமது அணையின் கட்டுமானத்தை துரிதப்படுத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன என்றும் கூறப்படுகிறது.
பாகிஸ்தானின் துணை பிரதமர் நேற்று சீனாவுக்கு சென்ற நிலையில், அங்குள்ள அமைச்சர்களை சந்தித்து பேசியதாகவும், அதன் பின்னர் சீனா இந்த முடிவை எடுத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முகமது அணை கட்டப்பட்டால், பாகிஸ்தானுக்கு வேளாண்மைக்கும் குடிநீருக்கும் தேவையான பாசன நீர் மற்றும் நீர் மின்சக்தியை சீனாவிடம் இருந்து பெற முடியும் என்றும் கூறப்படுகிறது.
Edited by Mahendran