வெள்ளி, 14 நவம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 23 செப்டம்பர் 2025 (09:23 IST)

H1B விசா கட்டண உயர்வு.. திடீரென இறங்கி வந்த அமெரிக்கா.. விலக்கு அளிக்க முடிவு..!

H1B விசா கட்டண உயர்வு.. திடீரென இறங்கி வந்த அமெரிக்கா.. விலக்கு அளிக்க முடிவு..!
அமெரிக்காவின் ஹெச்-1பி விசா கட்டண உயர்வு நடைமுறையில், மருத்துவர்களுக்கு விலக்கு அளிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.  
 
H1B விசா கட்டண உயர்வு, அமெரிக்க மருத்துவ துறையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரித்தனர். பல மருத்துவமனைகளில் வெளிநாட்டு மருத்துவர்களின் பங்களிப்பு அத்தியாவசியமானது. இதனால், கட்டண உயர்வினால் மருத்துவ பணியாளர்களை பணியமர்த்துவதில் சிக்கல் ஏற்படும் நிலை உருவானது. அமெரிக்காவில் மட்டும் சுமார் 7 கோடி மக்கள் மருத்துவர்களின் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
இந்நிலையில், மக்களின் நலனை கருத்தில் கொண்டு, மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு விசா கட்டண உயர்வில் இருந்து விலக்கு அளிக்க, அமெரிக்க அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் டெய்லர் ரோஜர்ஸ், அதிபரின் உத்தரவில் சில விலக்குகள் இருக்கும் என்றும், அதில் மருத்துவப் பணியாளர்கள் அடங்குவர் என்றும் தெரிவித்துள்ளார்.
 
மருத்துவ துறைக்கு அளிக்கப்பட்ட சலுகை படிப்படியாக மற்ற துறைக்கும் வரும் என வல்லுனர்கள் கூறுகின்றனர்.
 
Edited by Siva