வியாழன், 13 நவம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 23 செப்டம்பர் 2025 (11:50 IST)

பாகிஸ்தான் பிரதமரை திடீரென சந்திக்கும் டிரம்ப்.. முக்கிய பேச்சுவார்த்தையா?

பாகிஸ்தான் பிரதமரை திடீரென சந்திக்கும் டிரம்ப்.. முக்கிய பேச்சுவார்த்தையா?
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் பல்வேறு முஸ்லிம் நாடுகளின் தலைவர்களுடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
 
ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டங்கள் அமெரிக்காவில் நடைபெற்று வரும் நிலையில்,  பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மட்டுமின்றி, கத்தார், சவூதி அரேபியா, இந்தோனேசியா, துருக்கி, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளின் தலைவர்களையும் டிரம்ப் சந்திக்க உள்ளார்.
 
இந்தப் பேச்சுவார்த்தைகளின் முக்கிய நோக்கம் இஸ்ரேல் - காசா போரை முடிவுக்கு கொண்டுவருவது, மத்திய கிழக்கு மற்றும் சர்வதேச அளவில் சில ராஜதந்திர மற்றும் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்வது ஆகியவை குறித்து விவாதிப்பது என்று கூறப்படுகிறது.
 
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும், அப்போது இந்தியா குறித்தும் பேசப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 
Edited by Mahendran