வெள்ளி, 26 செப்டம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth K
Last Modified: திங்கள், 8 செப்டம்பர் 2025 (11:37 IST)

வெனிசுலாவை டார்கெட் செய்த ட்ரம்ப்! சுற்றி வளைக்கும் ராணுவ கப்பல்கள்! - கரீபியன் கடலில் பரபரப்பு!

trump maduro

அமெரிக்கா - வெனிசுலா இடையேயான மோதல் வலுவடைந்துள்ள நிலையில் வெனிசுலா கடல் பகுதியில் அமெரிக்க ராணுவ கப்பல்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

 

லத்ட்தீன் அமெரிக்க நாடான வெனிசுலா உலகின் மிகப்பெரிய எண்ணெய் இருப்புகளைக் கொண்ட நாடாக உள்ளது. ஆனால் ஆரம்பம் முதலே வெனிசுலாவை கட்டுப்படுத்தும் அமெரிக்காவின் திட்டங்களுக்கு எதிராக வெனிசுலா தொடர்ந்து அமெரிக்காவிற்கு அச்சுறுத்தல் அளித்து வருகிறது. இந்நிலையில் வெனிசுலாவில் இருந்து போதைப்பொருட்கள் அமெரிக்காவிற்கு அதிகளவில் கடத்தப்படுவதாக அதிபர் ட்ரம்ப் குற்றம் சாட்டி வந்தார்.

 

மேலும் போதைப்பொருள் கடத்தல் கும்பலோடு வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவிற்கு தொடர்பு உள்ளதாக குற்றம் சாட்டியுள்ள ட்ரம்ப், அவர் குறித்த தகவல் அளிப்பவர்களுக்கு 50 மில்லியன் டாலர் பரிசு என்றும் அறிவித்தார். 

 

இந்நிலையில் சமீபமாக கரீபியன் கடல்பகுதியில் அமெரிக்க ராணுவ கப்பல்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. அவை கொஞ்சம் கொஞ்சமாக வெனிசுலா எல்லை நோக்கி நகர்ந்து வருவதால் பரபரப்பு எழுந்துள்ளது. மதுரோ அரசின் நாட்கள் எண்ணப்படுகிறது என ஏற்கனவே ட்ரம்ப் கூறியிருந்த நிலையில், வெனிசுலா மீது போர் தொடங்கப்படுமா என்ற கேள்விகளும் எழுந்துள்ளது.

 

Edit by Prasanth.K