அமெரிக்காவின் 51வது மாகாணமாக கனடா மாறினால் ஒரு பைசா செலவில்லை.. டிரம்ப் கூறிய ஆலோசனை..!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் கூறுகையில், அமெரிக்காவின் 'கோல்டன் டோம்' பாதுகாப்பு அமைப்பை பெற, கனடா அமெரிக்காவின் 51வது மாநிலமாக மாறும் சாத்தியத்தை பரிசீலித்து வருகிறது என தெரிவித்தார்.
தன் சமூக வலைத்தள பக்கத்தில் ட்ரம்ப் கூறியதாவது: "கனடாவிடம் நான் தெரிவித்தேன், அமெரிக்காவின் பிரமாண்டமான கோல்டன் டோம் பாதுகாப்பு அமைப்பில் சேர விரும்புகிறீர்கள் என்றால் என்னிடம் சொல்லலாம். தனிப்பட்ட நாடாகவே தொடர்ந்தால் 61 பில்லியன் டாலர் செலவாகும். ஆனால் 51வது மாநிலமாக மாறினால், எந்தச் செலவும் வேண்டியதில்லை. அவர்கள் இதை பரிசீலிக்கிறார்கள்!" என்றார்.
2024ல் இருந்து ட்ரம்ப் கனடாவை "சாத்தியமான 51வது மாநிலம் என குறிப்பிட்டு வருகிறார். மே 3ஆம் தேதி கனடா பிரதமர் மார்க் கார்னி வெள்ளை மாளிகைக்கு வந்தபோது, ட்ரம்ப் மீண்டும் இந்த ஆலோசனையை அவர் கூறினார்.
ட்ரம்ப் கூறிய கோல்டன் டோம் என்பது மிகப்பெரிய பன்முக ஏவுகணை பாதுகாப்பு திட்டம்.இது 2029க்குள் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இஸ்ரேலின் Iron Dome-ஐவிட வேறுபட்டது. இது தொலைதூர, ஹைப்பர்சானிக் ஏவுகணைகளை தடுத்து, அமெரிக்காவையே முழுவதுமாக பாதுகாக்கும். விண்வெளி அடிப்படையிலான
இயந்திரங்கள் மூலம் ஏவுகணைகளை பறக்கும் போதே அழிக்கும் திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva