1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. South Korea corona dead 33

தென் கொரியா; கொரோனா பலி 33 ஆக உயர்வு

தென் கொரியா
தென் கொரியாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது.

சீனாவை தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. குறிப்பாக சீனாவில் 2,891 பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர். மேலும் இத்தாலி, ஈரான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா வைரஸால் உயிரிழப்புகள் அதிகமாகி வருகின்றது. உலகளவில் கொரோனா வைரஸால் 3000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே தென் கொரியாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளோரின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 5,328 பேருக்கு கொரோனா தாக்குதல் உள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
முஸ்லிம்கள் பாதுகாப்பா? அரசியல் வரவா? ரஜினி மீட்டிங்கின் பின்னணி என்ன??