திங்கள், 8 செப்டம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 5 செப்டம்பர் 2025 (08:01 IST)

ஃபேஸ்புக், எக்ஸ், யூடியூப், இன்ஸ்டாவுக்கு தடை! அண்டை நாடு எடுத்த அதிரடி முடிவு..!

ஃபேஸ்புக், எக்ஸ், யூடியூப், இன்ஸ்டாவுக்கு தடை! அண்டை நாடு எடுத்த அதிரடி முடிவு..!
நேபாள அரசு, உள்நாட்டு விதிமுறைகளின்படி பதிவு செய்ய தவறியதற்காக, ஃபேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம், யூடியூப், ரெட்டிட் போன்ற 26 சமூக ஊடக தளங்களுக்கு தடை விதித்துள்ளது. 
 
நேபாளத்தில் சமூக ஊடகங்கள் பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், அந்நாட்டு அரசு சில விதிமுறைகளை வகுத்தது. அதன்படி, வெளிநாட்டுச் சமூக ஊடக நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களை நேபாளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றும், உள்நாட்டு வரி கொள்கைகளுக்கு கட்டுப்பட வேண்டும் என்றும் ஒரு புதிய சட்டம் கொண்டுவரப்பட்டது.
 
நேபாள அரசு பலமுறை இந்த சமூக ஊடக நிறுவனங்களுக்கு தங்கள் நிறுவனங்களை நேபாளத்தில் பதிவு செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆனால், இந்த நிறுவனங்கள் அரசின் அறிவிப்பை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
 
அரசின் அறிவிப்புகளை இந்த நிறுவனங்கள் மதிக்காததால், 26 சமூக ஊடக தளங்களுக்கும் முற்றிலுமாக தடை விதித்துள்ளது. இந்த தடையால், பல நிறுவனங்கள் தங்கள் வர்த்தகத்தை இழந்ததுடன், நேபாள மக்களின் தகவல் தொடர்புக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 
 
நேபாள அரசின் இந்த நடவடிக்கை, சமூக ஊடக நிறுவனங்கள் ஒரு நாட்டில் செயல்படும்போது, அந்த நாட்டின் சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட வேண்டும் என்ற ஒரு செய்தியை உலகிற்கு உணர்த்தியுள்ளது.

Edited by Siva