திங்கள், 16 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 12 ஜனவரி 2024 (15:30 IST)

அணு ஆயுதத்தை கையில் எடுப்போம் - ரஷ்யா எச்சரிக்கை

Russian forces
உக்ரைன் நாடு, நேட்டோ கூட்டமைப்பில் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், ரஷ்யா போர் தொடுத்தது.

உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் ரஷ்யா போர் நிறுத்தம் செய்யவில்லை. இரு ஆண்டுகள் தொடர்ந்து இரு நாடுகள் இடையே போர் நடந்து வருகிறது. இதில்  இரண்டு தரப்பிலும், பல ஆயிரம் பேர் பலியாகியுள்ளானர்.

இந்த நிலையில், உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா, பின்லாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் பொருளாதார உதவி மற்றும் நிதியுதவி அளித்து வருகின்றன.

இதனால், உக்ரைன் தொடர்ந்து ரஸ்யாவை எதிர்த்து போரிட்டு வருகிறது. இந்த நிலையில், உக்ரைன்  மேற்கத்திய நாடுகளின் ஏவுகணைகளை பயன்படுத்தினால், அணு ஆயுதத்தை கையில் எடுப்போம் என்று ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து ரஷ்யா பாதுகாப்பு கவுன்சில் டிமிட்ரி தலைவர் மெத்வதேவ், அமெரிக்கா கொடுத்தச  ஏவுகணையை  பயன்படுத்த நினைக்கிறது. இதை தற்காப்பாக ஏற்க முடியாது. போரில் அணு ஆயுதத்தை ரஷ்யா பயன்படுத்த இது அடிப்படை காரணமாக அமையும் என்று தெரிவித்துள்ளார்.