திங்கள், 16 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 6 ஜனவரி 2024 (13:50 IST)

மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் - காங்கிரஸ் மற்றும் பாஜக கோரிக்கை!

west bangal
மேற்குவங்க பாஜக மாநிலத் தலைவர் சுகந்தா மற்றும் காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இருவரும் மேற்கு வங்கத்தில் உடனடியாக குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்

மேற்கு வங்கம் மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.
 
இங்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டத்தைக் கண்டித்து மேற்கு வங்கம் மா நிலத்தில் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்த  நிலையில், மேற்குவங்க பாஜக மாநிலத் தலைவர் சுகந்தா மற்றும் காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இருவரும் மேற்கு வங்கத்தில் உடனடியாக குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.

வரும் மக்களவைத் தேர்தலில், தன்னை எதிர்த்துப் போட்டியிடுமாறு முதல்வர் மம்தாவுக்கு காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞன் சவுத்ரி சவால் விடுத்துள்ளார்.

மேலும், மோடிக்கும், மம்தா பானர்ஜிக்கும் மறைமுகமாக தொடர்பு இருப்பதாக ஆதிர்  ரஞ்சன் சவுத்ரி விமர்சனம் கூறியுள்ளார்.

ஏற்காவே பாராளுமன்றத் தேர்தலுக்காக இந்தியா கூட்டணியில், திரிணாமுல், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ள நிலையில், இப்புதிய விவகாரத்தில் திரிணாமுல் கட்சி மீது  காங்கிரஸ் கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் அம்மாநிலத்தில் பெரும் பரபர்பபை ஏற்படுத்தியுள்ளது.