வியாழன், 30 அக்டோபர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 29 அக்டோபர் 2025 (10:11 IST)

மெலிஸா புயலால் ஜமைக்காவில் கடும் சேதம்.. கியூபாவை நோக்கி நகர்வதால் மக்கள் அச்சம்..!

மெலிஸா புயலால் ஜமைக்காவில் கடும் சேதம்.. கியூபாவை நோக்கி நகர்வதால் மக்கள் அச்சம்..!
மத்திய அமெரிக்க கடற்பகுதியில் உருவான வரலாற்றில் வலிமையான 'மெலிஸா' புயல், மூன்றாம் நிலை தீவிரத்துடன் ஜமைக்காவின் வடக்கு கடற்கரையை தாக்கியது. இதனால் தென்மேற்கு ஜமைக்காவில் வீடுகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட கட்டிடங்கள் கடுமையான சேதத்தை சந்தித்துள்ளன.
 
மெலிஸா புயலின் தாக்கத்தால் ஜமைக்காவில் 3 பேர், ஹைதியில் 3 பேர், டொமினிக் குடியரசுவில் ஒருவர் என மொத்தம் 7 பேர் உயிரிழந்துள்ளனர். பேரழிவு சேதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஜமைக்கா பிரதமர் எச்சரித்துள்ளார். மேலும், நிலச்சரிவு மற்றும் கனமழை அபாயமும் உள்ளது.
 
தற்போது 201 கி.மீ. வேகத்தில் நகரும் இந்தப் புயல், இன்று நள்ளிரவில் 3 அல்லது 4ஆம் நிலைத் தீவிரத்துடன் கியூபாவை நோக்கி செல்லவுள்ளது. கியூபாவின் தென்கிழக்கு கடற்கரையில் 8 முதல் 12 அடி உயரத்திற்குக் கடல் அலைகள் எழும் என்றும், இது வெள்ள பாதிப்பை அதிகரிக்கும் என்றும் அஞ்சப்படுகிறது. இதனால் கியூபா மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
 
Edited by Mahendran