வெள்ளி, 31 அக்டோபர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 28 அக்டோபர் 2025 (14:55 IST)

இந்தியா விஷயத்தில் டிரம்ப் மிகப்பெரிய தவறு செய்துவிட்டார்: அமெரிக்க அதிகாரி விமர்சனம்..!

இந்தியா விஷயத்தில் டிரம்ப் மிகப்பெரிய தவறு செய்துவிட்டார்: அமெரிக்க அதிகாரி விமர்சனம்..!
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கியதற்காக இந்தியா மீது டிரம்ப் நிர்வாகம் 50% கூடுதல் வரி விதித்ததை குறித்து, அமெரிக்காவின் முன்னாள் வர்த்தக செயலாளர் ஜினா ரைமண்டோ கடுமையான விமர்சனங்களை பதிவு செய்துள்ளார்.
 
சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அவர், வர்த்தக பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும் இந்த சூழலில், நட்பு நாடுகளை சீண்டிப் பார்க்கும் டிரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கை மிகப்பெரிய தவறு என்று கண்டனம் தெரிவித்தார்.
 
"அமெரிக்கா மற்ற நாடுகளுடன் நம்பகமான கூட்டாளியாக இல்லாவிட்டால், அது பலவீனமடையும். அமெரிக்கா தனித்து செயல்படுவது பேரழிவை ஏற்படுத்தும்" என்றும் ரைமண்டோ கடுமையாக எச்சரித்தார். 
 
ஐரோப்பிய மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் வலுவான உறவுகளை பேணாமல், டிரம்ப் நிர்வாகத்தால் திறம்பட செயல்பட முடியாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். டிரம்ப்பின் இந்த வெளிநாட்டு கொள்கை தவறானது என அவர் குற்றம் சாட்டினார்.
 
Edited by Mahendran