திங்கள், 16 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 12 ஜனவரி 2024 (14:15 IST)

அமெரிக்காவும் பிரிட்டனும் அதிக விலை கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும்: ஹவுதி அமைப்பு எச்சரிக்கை..!

ஏமன் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தினால் அமெரிக்காவும் பிரிட்டனும் அதிக விலை கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என ஹவுதி அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
செங்கடல் பகுதியில் சர்வதேச கப்பல்கள்  சென்று கொண்டிருக்கும் நிலையில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அந்த கப்பல்களுக்கு அச்சம் தரும் வகையில் உள்ளனர். இதனை அடுத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா பிரிட்டன் படைகள் இன்று அதிரடியாக தாக்குதல் நடத்தியது. 
 
ஏமன் நாட்டில் உள்ள முக்கிய நகரங்களில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தங்கும் இடங்களில் போர் விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் குறித்து ஹவுதி அமைப்பின் முக்கிய பிரமுகர் ஒருவர் கூறிய போது ’அமெரிக்கா பிரிட்டன் கப்பல்கள் நீர்மூழ்கி கப்பல்கள் மற்றும் போர் விமானங்களால் நடத்தப்பட்ட  தாக்குதல் நியாயமின்றி நடந்துள்ளது. 
 
அமெரிக்காவின் பிரிட்டானும் இதற்கு அதிக விலை கொடுக்க தயாராக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. ஆனால் இந்த அச்சுறுத்தலுக்கு எல்லாம் நாங்கள் பயப்பட போவதில்லை என அமெரிக்கா பதிலடி கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva