திங்கள், 16 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : சனி, 6 ஜனவரி 2024 (18:13 IST)

ஆத்தியா எல்-1: இஸ்ரோ விஞ்ஞானிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள் -தினகரன்

இந்தியாவின் இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையம் தனது ஆத்தியா விண்கலம் மூலம் சூரியன் குறித்த ஆய்விற்காக, ஆத்தியா எல்-1 கடந்த செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி  இஸ்ரோ விண்ணில் செலுத்தியது.

இந்த ஆதித்யா எல் 1 விண்கலம் சூரியனின் வெப்பம், காந்த துகள்கள் வெளியேற்றம், விண்வெளியின் காலநிலை, விண்வெளியில் உள்ள துகள்கள் ஆகியவை குறித்து ஆய்வு செய்யும். மேலும், இது சூரியினில் ஏற்படும் காந்த புயல்கள் குறித்தும் ஆய்வு செய்யும் எனக் கூறப்பட்டது.

இந்த நிலையில் aditya l1இந்தச் சூழலில் ஆதித்யா விண்கலம் 127 நாட்கள் பயணித்து இன்று மாலை 4 மணி அளவில் எல்1 புள்ளியைச் வெற்றிகரமாக சென்றடைந்தது.

அடுத்த 5 ஆண்டுகளுக்குச் சுற்று வட்டப்பாதையில் சுற்றியபடி சூரியன் குறித்த ஆய்வுகளை ஆத்தியா ஆய்வு மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

இந்த நிலையில், சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல் 1 விண்கலத்தை வெற்றிகரமாக சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தி புதிய சாதனை படைத்திருக்கும் இஸ்ரோ விஞ்ஞானிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

‘’இதுவரை அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி மையங்கள் மட்டுமே சூரியனை ஆய்வு செய்துவந்த நிலையில் நான்காவது நாடாக இந்தியா உருவெடுத்திருப்பது ஒவ்வொரு இந்தியரையும் பெருமடையைச் செய்திருக்கிறது

விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா அடைந்திருக்கும் புதிய உச்சத்தை உலகிற்கு எடுத்துக் காட்டும் வகையில் மேலும் பல வரலாற்றுச் சாதனைகளை புரிந்து தாய் நாட்டிற்கு பெருமை சேர்க்க இஸ்ரோ விஞ்ஞானிகள் அனைவருக்கும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்’’என்று தெரிவித்துள்ளார்.