செவ்வாய், 30 செப்டம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth K
Last Modified: செவ்வாய், 30 செப்டம்பர் 2025 (12:17 IST)

மடகாஸ்கரிலும் பரவியது Gen Z போராட்டம்! ஆட்சி கவிழ்ப்பு! வானில் பறக்கும் Straw hats கொடி!

Madacascar

நேபாளம், இந்தோனேஷியாவை தொடர்ந்து மடகாஸ்கரிலும் Gen Z போராட்டம் வெடித்த நிலையில் அங்கு அமைச்சரவை கலைக்கப்பட்டுள்ளது.

 

அரசுகளின் செயல்பாடுகளுக்கு எதிராக இளைஞர்களிடையே ஏற்படும் Gen Z புரட்சி சமீபமாக இந்தோனேஷியா, நேபாளத்தில் பெரும் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதை தொடர்ந்து தற்போது மடகாஸ்கரிலும் இந்த போராட்டம் வெடித்துள்ளது.

 

மின்சார துண்டிப்பு, வறுமை உள்ளிட்டவற்றை அரசு சரியாக கையாளவில்லை என மடகாஸ்கர் பிரதமர் க்ரிஸ்டியன் நட்ஸேவுக்கு எதிராக இளைஞர்கள் கடந்த வியாழக்கிழமை போராட்டத்தில் குதித்தனர். இதில் மடகாஸ்கர் பாதுகாப்பு படைக்கும், இளைஞர்களுக்கும் இடையே எழுந்த மோதலில் 22 பேர் உயிரிழந்தனர்.

 

அதை தொடர்ந்து பல அரசு அலுவலகங்களை சூறையாடிய இளைஞர்கள் Gen Z போராட்டத்தின் ட்ரேட்மார்க் கொடியான, One Piece ஜப்பான் அனிமேவில் வரும் Straw Hats கொடியை பறக்கவிட்டனர்.

 

இந்த விவகாரத்தில் தலையிட்ட மடகாஸ்கர் குடியரசு தலைவர் ஆண்ட்ரே ரஜோலினா, தற்போதைய பிரதமர் மற்றும் அரசாங்கத்தின் செயல்பாடுகளை முடிவுக்குக் கொண்டு வர முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார். பல நாடுகளிலும் இந்த Gen Z போராட்டம் கடும் அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.

 

Edit by Prasanth.K