கரூர் கூட்டநெரிசல் பலி விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள தவெக நிர்வாகிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் விசாரணை நடந்து வருகிறது.
தமிழக வெற்றிக் கழக பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் பலியான நிலையில் இது தொடர்பாக கரூர் மேற்கு மாவட்ட தவெக செயலாளட் மதியழகன், மத்திய மாநகர பொறுப்பாளர் பவுன்ராஜை போலீஸார் கைது செய்து கரூர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்துள்ளனர்.
இந்த விசாரணையில் விளக்கமளித்த போலீஸார், முனியப்பன் கோவில் பகுதியில் விஜய் கேரவனுக்குள் செல்லாமல் இருந்திருந்தால் அவரை பார்த்துவிட்டு கூட்டம் கலைந்திருக்கும். புஸ்ஸி ஆனந்த் வாகனத்தை நிறுத்தி தாமதத்தை ஏற்படுத்தினார். கைது செய்யப்பட்டுள்ள இரு நிர்வாகிகளும் விஜய் வாகனத்தை முன்னே செல்லவிடாமல் தாமதம் செய்தனர்.
விஜய் வாகனம் கரூர் பாலத்தில் இருந்து வேண்டுமென்றே ராங் ரூட்டில் சென்றது. நாங்கள் தடுத்தும் அதை இரண்டாம் கட்ட தலைவர்கள் பொருட்படுத்தவில்லை” என குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து நிர்வாகிகளிடம் கேள்வி எழுப்பிய நீதிபதி பரத் குமார் “காலாண்டு விடுமுறை, வார இறுதி நாளில் மக்கள் குறைவாக வருவார்கள் என எப்படி கணக்கிட்டீர்கள். நீங்கள் கேட்ட 3 இடமுமே இதற்கு போதாது. அதிக கூட்டம் வரும் என விஜய்க்கு தெரியுமா? அவருக்கு சொல்லப்பட்டதா? எடப்பாடி பழனிசாமிக்கு கட்சியினர் மட்டும்தான் வருவார்கள். ஆனால் விஜய் வந்தாலே மாநாடுதான். எராளமான பெண்கள், குழந்தைகள் கண்டிப்பாக வருவார்கள். அதற்கு தகுந்த இடத்தை நீங்கள் கேட்டிருக்க வேண்டும்” என பேசியுள்ளார்.
அதை தொடர்ந்து பதிலளித்த நிர்வாகிகள் இவ்வளவு கூட்டம் வரும் என தாங்கள் எதிர்பார்க்கவில்லை என கூறியுள்ளனர். இந்த விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.
Edit by Prasanth.K