திங்கள், 16 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 14 நவம்பர் 2023 (07:51 IST)

காசா கட்டுப்பாட்டை இழந்த ஹமாஸ்.. சொத்துக்களை சூறையாடும் பொதுமக்கள்..!

Gaza - Israel
கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு இடையே கடும் போர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது காசாவில் ஹமாஸ் தனது கட்டுப்பாட்டை இழந்து விட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன. மேலும் ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் பொதுமக்கள் சூறையாடத் தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.  

இஸ்ரேல் ராணுவம் காசா மீது கடந்த சில நாட்களாக சரமாரியாக தாக்குதல் நடத்தி வருகிறது. மருத்துவமனை உள்பட பொதுமக்கள் பயன்படுத்தும் இடங்களிலும் ராணுவ வீரர்கள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ஹமாஸ்  கட்டுப்பாட்டில் காசா இதுவரை இருந்த நிலையில் தற்போது இஸ்ரேல் ராணுவம் நெருங்கி வருவதால் பயங்கரவாதிகள் தெற்கு நோக்கி தப்பி ஓடிவிட்டதாகவும், இதனால் ஹமாஸ் அமைப்பில் உள்ள பொருட்களை பொதுமக்கள் சூறையாடி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

ஹமாஸ் அமைப்பின் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை இல்லை என்று இஸ்ரேல் அமைச்சர் ஒருவர் கூறியுள்ளதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Edited by Siva