1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 22 மே 2025 (12:14 IST)

சீனா - மலேசியா கண்டுபிடிக்கும் மாற்று எரிபொருள்.. EV வாகனங்களுக்கு மூடுவிழாவா?

சீனா மற்றும் மலேசியா தற்போது மாற்று எரிபொருள் முயற்சியை மேற்கொண்டுள்ளது. அதுதான் ஹைட்ரஜன் தொழில்நுட்பத்தில் இயங்கும் எஞ்ஜின்கள். எனவே கூடிய விரைவில் மின்சார வாகனங்களுக்கு மூடுவிழா ஏற்படும் என தெரிகிறது.
 
 2000ஆம் ஆண்டு, டொயோட்டா "ப்ரியஸ்" கார் அறிமுகமானபோது தான் எலக்ட்ரிக் வாகனங்கள்  என்னவென்று பேசத் தொடங்கப்பட்டது. இது ஜப்பானில் முதலில் சோதனை செய்யப்பட்டு பின்னர் அமெரிக்காவிலும் விற்பனைக்கு வந்தது.
 
அதற்குப் பிறகு எலான் மஸ்க் உருவாக்கிய டெஸ்லா நிறுவனம், முழு மின்னணு வாகனமான  "மாடல் எஸ்" காரை அறிமுகப்படுத்தியது. இது புதிய தொழில்நுட்பத்தால் உருவான முதல் உண்மையான EV முயற்சி எனலாம். இதன் வெற்றியால் எலான் மஸ்க் உலகின் மிகபெரிய பணக்காரராக உயர்ந்தார்.
 
இதே நேரத்தில், சீனாவின் BYD நிறுவனம் டெஸ்லாவுக்கு போட்டியாக வளர்ந்து,  சந்தைகளில் முன்னிலை பெற்றது. இதையடுத்து பல நாடுகள் ஹைட்ரஜன் எரிபொருளை குறித்து ஆராய ஆரம்பித்தன.
 
ஹைட்ரஜன் தொழில்நுட்பத்தில் ஹூண்டாய் முக்கிய முன்னோடியாக இருந்து வருகிறது. ஹைட்ரஜன் செல்கள் மற்றும் ஹைட்ரஜன் மீது இயங்கும் இன்டர்னல் கம்பஷன் என்ஜின்கள் போன்ற புதிய முயற்சிகள் நடந்தன. பல நாடுகள் ஹைட்ரஜன் போன்ற மாற்று எரிபொருளில் ஆராய்ச்சிக்கும் முதலீட்டுக்கும் நுழைந்துள்ளன.
 
தற்போது சீனா–மலேசியா இணைந்து உருவாகும் புதிய எரிபொருள் தான் ஹைட்ரஜன். இது எலக்ட்ரிக் மற்றும் பெட்ரோலை கூட தாண்டக்கூடியதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்
 
Edited by Mahendran