செவ்வாய், 22 ஜூலை 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 21 ஜூலை 2025 (16:33 IST)

பள்ளி மீது நொறுங்கி விழுந்த விமானம்.. 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு என்ன ஆச்சு? பெரும் பதட்டம்..!

வங்கதேசத் தலைநகர் டாக்காவில் ஒரு பள்ளி கட்டிடத்தின் மீது சீனாவில் தயாரிக்கப்பட்ட F-7 ரக ஜெட் பயிற்சி விமானம் நொறுங்கி விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் மாணவர்கள் உட்பட பலருக்குக் காயம் ஏற்பட்டதாகவும், ஒருவர் உயிரிழந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
வகுப்புகள் நடைபெற்று கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்ட நிலையில், விமானம் மோதிய அடுத்த சில நிமிடங்களில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் காயங்களுடன் பள்ளியை விட்டு அச்சத்துடன் வெளியே ஓடி வந்துள்ளனர். குறைந்தது 100 பேர் காயம் அடைந்திருப்பதாகவும், ஒருவர் உயிரிழந்திருப்பதாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
வங்கதேச விமானப்படை இந்த விபத்தை உறுதி செய்திருந்தாலும், விமானி உயிர் பிழைத்தாரா என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. விமான விபத்து நடந்த இடத்தில் ராணுவம் மற்றும் தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 
 
மூன்று மாடி பள்ளி கட்டிடம் என்பதால், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஏற்பட்ட சேதம் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
 
Edited by Mahendran