தொடர்புடைய செய்திகள்
- யார் இந்த குட்டி ராதிகா: டிரெண்டாகும் அளவிற்கு என்ன செய்தார்?
- குமாரசாமி பதவியேற்பிலும் கருப்பு சட்டையா? ஸ்டாலினை கலாய்த்த தமிழிசை!
- குஜராத்தில் இருந்து போலி இயந்திரம்: இது மோசடி தேர்தல்: பொங்கும் எடியூரப்பா!
- தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி சரியா? குமாரசாமிக்கு எதிராக மனுதாக்கல்
- எங்கள் கூட்டணியில் குழப்பம் இல்லை: குமாரசாமி விளக்கம்!
யார் இந்த குட்டி ராதிகா: டிரெண்டாகும் அளவிற்கு என்ன செய்தார்?
பிரபல நடிகை குட்டி ராதிகா தற்போது டிவிட்டர் மற்றும் கூகுள் தேடலில் டிரெண்டாகி வருகிறார். டிரெண்டாகும் அளவிற்கு இவர் செய்தது என்னவென்றால், கர்நாடக முதல்வராக பதவியேற்கவுள்ள குமாரசாமியை திருமணம் செய்ததுதான்.
எச்.டி.தேவகவுடாவின் மகனும், மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவருமான குமாரசாமியின் இரண்டாவது மனைவிதான் நடிகை குட்டி ராதிகா. குமாரசாமி கர்நாடக முதல்வராக பதவியேற்க உள்ள நிலையில், இவரது மனைவியை குறித்த செய்திகளை பலர் தேடி வருகின்றனர்.
கர்நாடகாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்த இவரை, கர்நாடகாவின் முதல்வராக பொறுப்பேற்க உள்ள குமாரசாமி கடந்த பத்து வருடங்களுக்கு முன்னர், ரகசிய திருமணம் செய்து கொண்டார்.
இதையடுத்து, யார் கண்ணிலும் படாமலிருந்த ராதிகா, குழந்தையோடு பெங்களூர் விமான நிலையத்தில் வர, குழந்தையின் தந்தை குமாரசாமி என்று அறிவித்தார். இதனை குமாரசாமியும் ஒப்புக்கொண்டார்.
கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் கன்னட படங்களில் நடித்து வந்தார். 16 வயதில், நீல மேக ஷாமா என்ற கன்னட படத்தின் மூலம் அறிமுகமானார். தமிழில் இயற்கை படம் மூலம் பிரபலமானார்.
தொடர்ந்து தனக்கென்று ரசிகர்கள உருவாக்கிக்கொண்ட ராதிகா தற்போது, பைரவ தேவி, ராஜேந்திர பொன்னப்பா, நிமஹாகி ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
குமாரசாமிக்கு முதல் திருமணம் நடந்த ஆண்டுதான் குட்டி ராதிகா பிறந்துள்ளார். இது நடிகை ரம்யா கடந்த 2016 ஆம் ஆண்டு தெரிவிக்கும் வரை ரகசியமாக வைக்கப்பட்டது எனவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
