தொடர்புடைய செய்திகள்
- மதுவந்தியின் மகன் படிப்பது வேறு பள்ளியிலா? நெட்டிசன்கள் விமர்சனம்
- தமிழகத்தில் இன்றும் நாளையும் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு!
- தனியார் பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டம் ! முக்கிய அறிவிப்பு
- மக்கள் வாழ தகுந்த நகரங்கள்.... சென்னை, கோவை எந்த இடம் தெரியுமா?
- 6 வீரர்களுக்கு கொரோனா உறுதி....சூப்பர் லீக் தொடர் ஒத்திவைப்பு
நியூஸ் சேனலை கலாய்த்து தள்ளிய பொடியன் - வைரல் வீடியோ!
சமூகவலைத்தளங்களில் கடந்த இரண்டு நாட்களாக ரித்விக் என்ற குழந்தை வைரலாகி கொண்டிருக்கிறான். 7 வயதே ஆன அவன் பெயரில் (Rithu Rocks) ஒரு யூடியூப் சேனல். அதில் செய்தி வாசிப்பாளர் , ரிப்போர்ட்டர் , பொதுமக்கள் என அவனே பலவித கெட்டப்புகளை போட்டுக்கொண்டு பிரேக்கிங் நியூஸ் வாசித்து செம வைரலாகி கொண்டிருக்கிறான்.
தந்தை உதவி இயக்குநர் என்பதால் வீடியோ கான்செப்ட் மற்றும் ஒளிப்பதிவு, டைரக்ஷன் என எல்லாமே அவரே பார்த்துக்கொள்ள ரிதுவின் தாய் காஸ்ட்டியூம் டிசைன் மற்றும் மேக்கப் கவனித்துக்கொள்கிறார். ரித்துவின் பிரேக்கிங் நியூஸ் வீடியோ ஒன்று ஒரே நைட்டில் செம ட்ரெண்ட் ஆகிவிட்டது. தற்போது அவரை பல பெரிய யூடியூப் சேனல்கள் அழைத்து நேர்காணல் எடுத்து வருகின்றனர். இதோ அந்த வைரல் குழந்தையின் திறமையை பாருங்கள்..
