1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. black-pandi-left-in-bigg-boss-house

நள்ளிரவில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிளாக் பாண்டி

பிளாக் பாண்டி
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிளாக் பாண்டி; அதிர்ச்சியில் போட்டியாளர்கள பிரபல தமிழ் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் முக்கியமானது பிக்பாஸ். ஆரம்ப காங்களில் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மிகவும் பரபரப்பாக சென்று கொண்டிருந்த இந்த நிகழ்ச்சியிலிருந்து கமல்ஹாசன் திடீரென விலகிவிடவே விஜய் சேதுபதி உள்ளே வந்தார். ஆவரும் கமல்ஹாசனுக்கு இணிஅயாகவே நிகழ்ச்சியை நடந்தி வந்தார்.
 
இந்த நிலையில் பிக்பாஸ் தமிழ் 10-வது சீசன் கடந்த ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாகத் தொடங்கியது. இந்த சீசனில் பிரபலங்கள் மட்டுமின்றி, பொதுமக்களும் போட்டியாளர்களாக பங்கேற்றுள்ளனர். இதனால் தொடங்கிய முதலே பிக்பாஸ் வீடு பரபரப்பாக காணப்படுகிறது. 
 
இந்நிலையில், பிக்பாஸ் 10-வது சீசனில் போட்டியாளராக பங்கேற்றுள்ள பிளாக் பாண்டி , தற்காலிகமாக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
உடல்நலக்குறைவு மற்றும் மருத்துவப் பிரச்சனை காரணமாக  பிளாக் பாண்டி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது. அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
பிளாக் பாண்டி திடீரென பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம், சக போட்டியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அவரது உடல்நிலை குறித்து பிக்பாஸ் தரப்பில் விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. பிளாக் பாண்டி மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வருவாரா என்பது ரசிகர்களிடையே தற்போது கேள்வியாக உள்ளது. 
 
About Writer
சு. பாலகிருஷ்ணன்
18 ஆண்டுகள் தமிழ் முன்னணி  நாளிதழ்களின் டிஜிட்டல் செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.  அரசியல், பொழுதுபோக்கு செய்திகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்.  .... Read More
அடுத்த கட்டுரையில்
கெட்டப்பே வேறலெவல்!.. சேயோனில் சீமான்!.. வெளியான வீடியோ...