திங்கள், 16 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 14 டிசம்பர் 2024 (10:36 IST)

சண்முக பாண்டியன் நடிக்கும் படை தலைவன் டிரைலரில் விஜயகாந்த்.. ரமணா ரெஃபரன்ஸ்..!

மறைந்த நடிகர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியன் மதுர வீரன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் இன்னும் அவர் ஹிட் கொடுக்க முடியாமல் போராடி வருகிறார். இவர் நடித்த ‘மதுர வீரன்’ திரைப்படம் பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும் ஓரளவு அவருக்கான  அடையாளத்தைப் பெற்று தந்தது.

இந்நிலையில் இப்போது சண்முகபாண்டியன் காட்டையும் யானைகளையும் பின்னணியாகக் கொண்ட படை தலைவன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை வால்டர் மற்றும் ரேக்ளா ஆகிய படங்களை இயக்கிய அன்பு இயக்கியுள்ளார். படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் மொத்தக் காட்சிகளும் படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது இந்த டீசர் வெளியாகிக் கவனம் பெற்றுள்ளது. அதற்கு முக்கியக் காரணம் டீசரின் இறுதிக் காட்சியில் ரமணா படத்தில் விஜயகாந்த் இடம்பெறும் காட்சி ஒன்று ரிக்ரியேட் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் ரமணா திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்த யூகி சேது அதே வேடத்தில் நடித்துள்ளார். டீசரில் சமீபத்தைய சென்சேஷனல் ஹிட்டான ‘நீ பொட்டுவச்ச தங்க கொடம்’ பாடலும் இணைக்கப்பட்டுள்ளது.