புதன், 26 நவம்பர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 20 செப்டம்பர் 2025 (14:08 IST)

விஜய் ஆண்டனியின் சக்தி திருமகன்தான் இந்த வார வின்னர்… முதல் நாள் வசூல் எவ்வளவு?

விஜய் ஆண்டனியின் சக்தி திருமகன்தான் இந்த வார வின்னர்… முதல் நாள் வசூல் எவ்வளவு?
தமிழ் சினிமாவில் சுக்ரன் படம் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. அதன் பின்னர் அவர் வரிசையாகப் பல ஹிட் படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக வலம்வந்தார். இதற்கிடையில் அவர் திடீரென ‘நான்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அந்த படம் ஹிட்டானதை தொடர்ந்து அவர் தொடர்ந்து நடிகராக கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

அவரது சமீபத்தையப் படங்களில் ‘பிச்சைக்காரன் 2’ தவிர வேறு எதுவும் வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை. இந்நிலையில் விஜய் ஆண்டனி தற்போது மீண்டும் இசையமைக்க ஆரம்பித்துள்ளார். அவர் நடிப்பில் அருவி பட இயக்குனர் அருண்பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சக்தி திருமகன்’ திரைப்படம் நேற்று ரிலீஸானது.

நேற்று நான்கு படங்கள் தமிழில் ரிலீஸான நிலையில் ‘சக்தி திருமகன்’ திரைப்படம்தான் முதல்நாளில் அதிக வசூல் செய்துள்ளது. முதல் நாளில் தமிழ்நாட்டில் 70 லட்ச ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாசிட்டிவ்வான விமர்சனத்தைப் பெற்றுள்ளதால் அடுத்தடுத்த நாட்களில் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.