விஜய் சேதுபதி - பிரஜின் இடையில் வெடித்த வாக்குவாதம்! பின்னணி என்ன?
பிக் பாஸ் நிகழ்ச்சியின் கடந்த வார எவிக்ஷன் ஷூட்டிங்கில் கலந்துகொண்ட நடிகர் விஜய் சேதுபதி வைல்டு கார்டு போட்டியாளர்களான திவ்யா, பிரஜின் மற்றும் சாண்ட்ரா ஆகியோருடன் கடுமையான விவாதத்தில் ஈடுபட்டார். 'டாஸ்க்குகளை சின்சியராக செய்யவில்லை' என்று அனைவரையும் விமர்சித்த விஜய் சேதுபதி, பிரஜினிடம் பேசியபோது, அது வாக்குவாதமாக மாறியது.
பிரஜின், விஜய் சேதுபதி இருவரும் 'மச்சான்' என்று அழைக்கும் அளவிற்கு நெருங்கிய நண்பர்கள். இருவரும் ஒரு சீரியலில் இணைந்து நடித்தவர்கள். விஜய் சேதுபதி சினிமாவில் உச்சம் தொட்ட நிலையில், பிரஜினுக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. பிரஜின் அடிப்படையில் கோபக்காரர் என்பதால், பிக் பாஸின் புகாரான 'கணவன்-மனைவி சேர்ந்து விளையாடுகிறார்கள்' என்பதை அவர் ஏற்கவில்லை.
சக போட்டியாளர்களிடம் பிரஜின், "விஜய் சேதுபதி சொல்லி வெளியில் அனுப்பவா?" என்று கேட்டது பிக் பாஸ் குழுவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. போட்டியாளர்கள் யாருக்கும் தனிப்பட்ட செல்வாக்கு இல்லை என்பதை உணர்த்தும் கட்டாயத்தில், விஜய் சேதுபதி மேடையில் கடுமையாக நடந்துகொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார் என்றும், அதுவே இந்த மோதலுக்கான பின்னணி என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Edited by Siva