வியாழன், 12 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 29 நவம்பர் 2024 (14:49 IST)

நானும் அஜித்தும் பண்ண இருந்த படம் ‘ஆவேஷம்’ போலதான் இருந்திருக்கும்… விக்னேஷ் சிவன் பகிர்ந்த தகவல்!

அஜித்தின் 62வது திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க,விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக கடந்த ஆண்டே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த படத்துக்காக விக்னேஷ் சிவன் உருவாக்கிய திரைக்கதை லைகா மற்றும் அஜித் தரப்புக்கு பிடிக்காததால் நிராகரிக்கப்பட்டது.

அதனால் அந்த படத்தில் இருந்து அவரை நீக்கி மகிழ் திருமேனியை ஒப்பந்தம் செய்தனர். அதையடுத்து விக்னேஷ் சிவன் தற்போது ப்ரதீப் ரங்கநாதன் நடிக்கும் LIK படத்தினை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் விக்னேஷ் சிவன் அளித்த சமீபத்தைய நேர்காணல் ஒன்றில் “நான் அஜித் சாருக்கு சொன்ன கதை ஆவேஷம் படம் போன்ற ஸோனில்தான் இருக்கும். அந்த திரைக்கதைத் தயாரிப்பு தரப்புக்குப் பிடிக்கவில்லை. என்ன இவ்வளவு காமெடியாக இருக்கிறது என்று கேட்டார்கள். அவர்கள் அஜித் சாருக்கு நல்ல எமோஷனான ஒரு கருத்துள்ள படமாக இருக்க வேண்டும் என் ஆசைப்பட்டுள்ளனர்” எனக் கூறியுள்ளார்.