வியாழன், 12 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 30 அக்டோபர் 2024 (11:46 IST)

மீண்டும் விடுதலை 2 படத்துக்கு ஷூட்டிங்கா?... இயக்குனர் வெற்றிமாறனின் முடிவு!

கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியான வெற்றிமாறன் இயக்கிய விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் நேர்மறையான விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்றது. இதையடுத்து வெற்றிமாறனின் ஹிட் பட லிஸ்ட்டில் விடுதலையும் இணைந்தது. இரண்டாம் பாகத்துக்கான ஷூட்டிங் தொடங்கி இறுதிகட்டத்தில் உள்ளது.

இரண்டாம் பாகத்தில் சூரிக்குக் காட்சிகள் மிகவும் குறைவு என்பதால் அவர் சம்மந்தப்பட்ட காட்சிகளுக்கான ஷூட்டிங் சமீபத்தில்  தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்போது விஜய் சேதுபதி சம்மந்தப்பட்ட காட்சிகளை வெற்றிமாறன் படமாக்கி வரும் நிலையில் வெற்றிமாறன் முடிவே இல்லாமல் ஷூட்டிங்கை நடத்திக் கொண்டுவருகிறார் என சொல்லப்பட்டது. இப்போது இறுதிகட்ட ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் படம் டிசம்பர் 20 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்போது இன்னும் ஒரு வார காலம் சிலக் காட்சிகளைப் படமாக்க வேண்டும் என இயக்குனர் வெற்றிமாறன் முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் விடுதலை 2 அறிவித்தபடி டிசம்பர் 20 ஆம் தேதி ரிலீஸாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.