வியாழன், 21 ஆகஸ்ட் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வியாழன், 21 ஆகஸ்ட் 2025 (12:12 IST)

மீண்டும் திரைக்கு வரும் 'உயிருள்ளவரை உஷா' திரைப்படம்.. டி ராஜேந்தர் அறிவிப்பு..!

டி. ராஜேந்தர் தயாரித்து, இயக்கி, நடித்த முதல் திரைப்படமான 'உயிருள்ளவரை உஷா', 38 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திரையிடப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 
1983-ம் ஆண்டு மார்ச் மாதம் வெளியான இந்த திரைப்படம், டி. ராஜேந்தரின் மனைவி உஷா ராஜேந்தர் தயாரிப்பில், நளினி, கங்கா, சரிதா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவானது. இதில், டி. ராஜேந்தர் 'செயின் ஜெயபால்' என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றதுடன், வசூலிலும் சாதனை படைத்தது.
 
நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் திரையிடப்பட உள்ள இப்படம் வரும் செப்டம்பர் மாதம் ரீ-ரிலீஸ் செய்யப்பட இருப்பதாகவும், அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் டி. ராஜேந்தர் தெரிவித்துள்ளார். இந்த புதிய வெளியீடும் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Mahendran