1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 28 மே 2025 (12:08 IST)

விபின் என் மேலாளரே இல்லை… குற்றச்ச்சாட்டுக்கு உன்னி முகுந்தன் பதில்!

தென்னிந்திய சினிமாவில் நன்கறியப்பட்ட நடிகராக இருக்கிறார் உன்னி முகுந்தன். மலையாளப் படங்களில் வில்லனாகவும், கதாநாயகனாகவும் நடித்து பிரபலமாகி வரும் இவர் நடிப்பில் சமீபத்தில் ரிலீஸான ‘மார்கோ’ திரைப்படம் கண்டனங்களைப் பெற்றாலும், வசூலை வாரிக் குவித்தது. தமிழிலும் அவர் சூரியின் ‘கருடன்’ படத்தில் வில்லனாக நடித்து நல்ல அறிமுகத்தைப் பெற்றுள்ளார். இந்நிலையில் அவரின் மேலாளர் விபின் தற்போது தன் மீது வன்முறையை செலுத்தியதாக தொடர்ந்த வழக்கால் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

இது சம்மந்தமாக விபின் கொடுத்த புகாரில் “சமீபத்தில் ரிலீஸான டோவினோ தாமஸின் ‘நரிவேட்ட’ படத்தைப் பாராட்டி நான் முகநூலில் பதிவிட்டதால் என்னை உன்னி முகுந்தன் சரமாரியாகத் தாக்கி ஆபாச வார்த்தைகளால் திட்டினார்” எனத் தெரிவித்துள்ளார். இது சம்மந்தமாக உன்னி முகுந்தன் மேல் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.  இதனால் அவர் கைது செய்யப்படலாம் என தகவல்கள் பரவி வந்தன.

இந்நிலையில் தன் மீதானக் குற்றச்சாட்டை மறுத்துள்ளார் உன்னி முகுந்தன். அதில் “விபின் 2018 ஆண்டு முதல் என் படங்களுக்கு மக்கள் தொடர்பாளராக விபின் பணியாற்றி வருகிறார். அவர் என் தனிப்பட்ட மேலாளர் இல்லை. எனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் விதமாக விபின் செயல்பட்டு வருகிறார். இது சம்மந்தமாக பேச நான் விபினின் அடுக்ககத்துக்கு சென்றேன். அங்கு அவர் என்னிடம் தெளிவான பதிலளிக்கவில்லை. என் கண்களைப் பார்த்து பேசாததால் நான் அவர் கூலிங் கிளாஸைக் கழற்றி கீழே வீசி உடைத்தேன். அது உண்மைதான். ஆனால் அவரை நான் தாக்கவில்லை.இந்த சம்பவங்கள் எல்லாம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இது எனக்கும் டோவினோக்கும் இடையிலான நட்பைக் கெடுக்கும் செயல். நான் டோவினோவிடம் விளக்கம் அளித்தேன். அவர் புரிந்துகொண்டார்.” எனக் கூறியுள்ளார்.