கமல்ஹாசனுடன் கூட்டணி அமைக்கும் சூர்யா… செம்ம சர்ப்ரைஸ் காத்திருக்கு!
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ரெட்ரோ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமிழ், பிரேம்குமார், ரம்யா சுரேஷ் உள்ளட்ட பலர் நடிக்க பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1 ஆம் தேதி ரிலீஸான வெற்றியைப் பெற்றது.
இதையடுத்து சூர்யாவின் அடுத்த படத்தின் பூஜை இன்று ஐதராபாத்தில் நடந்துள்ளது. குறுகிய கால படமாக உருவாகவுள்ள இந்த படத்தை வெங்கட் அட்லூரி இயக்குகிறார். இவர் வாத்தி மற்றும் லக்கி பாஸ்கர் ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த படத்துக்குப் பிறகு சூர்யா வாடிவாசல் படத்தில் நடிக்கிறார். இந்நிலையில் சூர்யா விரைவில் கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்துக்காக ஒரு படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது. சமீபகாலமாக கமல்ஹாசன் இளம் நடிகர்களைக் கொண்டு படங்கள் தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.