1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 27 மே 2025 (07:51 IST)

சச்சின் சாதனையை முறியடித்த சூர்யகுமார் யாதவ்.. குவியும் வாழ்த்துக்கள்

suryakumar
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடும் சூர்யகுமார் யாதவ், நேற்று ஜெய்ப்பூரில் நடந்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
 
இப்போட்டியில் அவர் 39 பந்துகளில் 6 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் அடித்து 57 ரன்கள் எடுத்தார். இது அவருக்கு இந்த சீசனில் 5வது அரைசதம் ஆகும். அவரது ஸ்ட்ரைக் ரேட் 156.15 ஆக இருந்தது.
 
இந்த அரைசதத்துடன் சூர்யகுமார், தொடர்ச்சியாக 14 போட்டிகளில் 25 ரன்கள் அல்லது அதற்கு மேல் எடுத்த ஒரே ஆட்டகாரர் என்ற புதிய உலக சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன் தெம்பா பவூமா என்பவர்13 இன்னிங்ஸ்களில் தொடர்ச்சியாக  25 ரன்கள் அல்லது அதற்கு மேல் எடுத்திருந்தார். மேலும் ஐபிஎலில், கடந்த சீசனில் ராபின் உதப்பா 10 தொடர்ச்சியான 25+ ரன்கள் எடுத்திருந்தார்.
 
மேலும் சூர்யகுமார் யாதவ் 14 இன்னிங்ஸ்களில் 640 ரன்கள் எடுத்து 71.11 சராசரியுடன் விளங்குகிறார். இது 600+ ரன்கள் எடுத்த வீரர்களில் விராட் கோலிக்கு (81.08 - 2016) அடுத்தபடியாக இரண்டாவது சிறந்த சராசரி ஆகும்.
 
சச்சின் 2010ஆம் ஆண்டு ஒரே சீசனில் 618 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவரது சாதனையை முறியடித்து மும்பை இந்தியன்ஸ் சார்பில் ஒரே சீசனில் அதிகம் ரன்கள் எடுத்த வீரராகவும் சூர்யகுமார் யாதவ் மாறியுள்ளார்.

Edited by Siva