வியாழன், 12 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: திங்கள், 30 செப்டம்பர் 2024 (12:05 IST)

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. ட்விட்டரில் வாழ்த்தாத ரஜினிகாந்த்..!

நேற்று தமிழகத்தின் துணை முதலமைச்சர் ஆக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில், உலக நாயகன் நடிகர் கமல்ஹாசன், முதல் கிட்டத்தட்ட அனைத்து தமிழக திரை உலக பிரபலங்கள் தங்களது டுவிட்டர் பக்கத்தில் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். ஆனால், ரஜினி மட்டும் அவருக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவிக்காத நிலையில், அவர் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த உதயநிதி ஸ்டாலின், நேற்றைய துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார் என்பதும், இதையடுத்து அவருக்கு கூட்டணி கட்சி தலைவர்கள், திமுக தலைவர்கள், தொண்டர்கள் உள்ளிட்டோர் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலினுக்கு கமல்ஹாசன், சிம்பு, தனுஷ், அருண் விஜய், அருள்நிதி, சிவகார்த்திகேயன், வெங்கட் பிரபு உள்ளிட்ட பல நடிகர்-நடிகைகள் வாழ்த்துக்களை தெரிவித்த நிலையில், ரஜினியிடம் இருந்து வாழ்த்து வரவில்லை என்பது வெறும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், தற்போது வந்துள்ள தகவலின்படி, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.


Edited by Siva