திங்கள், 16 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 18 பிப்ரவரி 2024 (16:26 IST)

ராஷ்மிகா சென்ற விமானத்தில் கோளாறு! மயிரிழையில் உயிர் தப்பியதாக பதிவு!

நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் ஷ்ரத்தா தாஸ் பயணம் செய்த விமானம் தொழில்நுட்ப கோளாறால் தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. நேற்று நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றுமொரு பாலிவுட் நடிகை ஷ்ரதா தாஸ் ஆகியோர் மும்பையிலிருந்து ஹைதராபாத் செல்லும் விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானத்தில் புறப்பட்டுள்ளனர்.

விமானம் புறப்பட்டு பறக்கத் தொடங்கிய சில நிமிடங்களில் விமானத்தில் கோளாறு இருப்பதை விமானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதனால் உடனடியாக மீண்டும் விமானம் மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்திற்கே திரும்ப வந்து தரையிறங்கியது. அதிலிருந்து பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள ராஷ்மிகா மந்தனா “இப்படித்தான் விமானத்திலிருந்து நாங்கள் மயிரிழையில் உயிர் தப்பினோம்” என்று பதிவிட்டு புகைப்படம் ஒன்றையும் ஷேர் செய்துள்ளார். விமானம் தரையிறங்குவதில் ஏற்பட்ட பிரச்சினையால் எதிர் சீட்டில் காலை வைத்து முட்டுக் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Rashmika


Edit by Prasanth.K