திங்கள், 29 செப்டம்பர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 9 செப்டம்பர் 2025 (16:15 IST)

ஏன் தமிழ் சினிமா படங்கள் 1000 கோடி ரூபாய் வசூல் செயவதில்லை… சிவகார்த்திகேயன் சொன்ன பதில்!

ஏன் தமிழ் சினிமா படங்கள் 1000 கோடி ரூபாய் வசூல் செயவதில்லை… சிவகார்த்திகேயன் சொன்ன பதில்!
தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிப் படங்கள் 1000 கோடி ரூபாய் வசூலை எட்டிவிட்டன. ஆனால் ஏன் இன்னும் எந்த தமிழ்ப் படமும் அந்த மைல்கல்லை எட்டவில்லை.  இத்தனைக்கும் ரஜினி,கமல், விஜய், அஜித் என சூப்பர் ஸ்டார் நடிகர்களும் லோகேஷ், முருகதாஸ் என இந்திய அளவில் கவனிக்கப்படும் இயக்குனர்களும் உள்ளனர்.

இந்நிலையில் ஏன் தமிழ் படங்கள் ஏன் இன்னமும் 1000 கோடி ரூபாய் வசூல் மைல்கல்லை எட்டவில்லை என்பது குறித்து சிவகார்த்திகேயன் பதிலளித்துள்ளார். அதில் “பெங்களூர், மும்பை போன்ற நகர்களில் வசூலிப்பது போல டிக்கெட் விலைக்கு அதிக விலைக்கு தமிழ்நாட்டிலும் விற்கப்பட்டால் ஜெயிலர் போன்ற படங்கள் 800 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்திருக்கும்.

அதே போல நாம் நான்கு வாரம் இடைவெளியில் ஓடிடியில் படங்களை வெளியிடுகிறோம்.  அமரன் படம் வட இந்தியாவில் இதனால் குறைவான வசூலைதான் செய்தது.” எனக் கூறியுள்ளார்.