திங்கள், 29 செப்டம்பர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 19 செப்டம்பர் 2025 (10:57 IST)

இரண்டு பாகன்களாக உருவாகிறதா சிம்பு & வெற்றிமாறன் இணையும் படம்?

இரண்டு பாகன்களாக உருவாகிறதா சிம்பு & வெற்றிமாறன் இணையும் படம்?
வெற்றிமாறன் –சூர்யா கூட்டணியில் உருவாக இருந்த ‘வாடிவாசல்’ திரைப்படம் தற்காலிகமாகக் கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில் இதனால் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் ஒரு படம் உடனடியாக உருவாக உள்ளதாக தகவல் வெளியானது. இந்த படம் ஒரு கேங்ஸ்டர் கதையாக உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த படத்துக்கும் ‘வடசென்னை ‘ படத்துக்கும் தொடர்பு இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் இந்த படமும் அடுத்தகட்டம் நோக்கி நகரவில்லை. ஏனென்றால் சிம்பு கேட்கும் சம்பளத்தால் தாணு அந்த படத்தினைத் தயாரிக்க விரும்பவில்லை என சொல்லப்படுகிறது. இதனால் இந்த படமும் கைவிடப்படலாம் என சொல்லப்பட்டது. ஆனால் இன்னும் 10 நாட்களில் இது சம்மந்தமான அப்டேட்டைக் கொடுப்பேன் என வெற்றிமாறன் கூறியுள்ளார்.

இந்த படமும் வடசென்னை படத்தோடு தொடர்புடைய ஒரு கதைதான் என்று வெற்றிமாறன் ஏற்கனவேக் கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது ஒரு நேர்காணலில் “இந்த படத்துக்கான 75 நிமிட காட்சிகள் ஏற்கனவே என்னிடம் உள்ளன. அதனால் இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாக வாய்ப்புள்ளது” எனக் கூறியுள்ளார்.