தேர்தல் முடிந்ததும் சிம்புவை வைத்து படம் இயக்குவேன்… சீமான் உறுதி!
இயக்குனரும் நடிகருமான சீமான் அரசியலுக்கு வந்த பின்னர் பல வருடங்களாக படங்கள் இயக்கவில்லை. அரசியல் பிசி காரணமாக அவர் திரையுலகில் பணி புரிவதை தவிர்த்து வந்தார். இருப்பினும் ஒருசில படங்களில் அவர் நடித்து வந்தார். தற்போது விக்னேஷ் சிவன் இயக்கும் LIK படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் விஜய் நடிப்பில் 'பகலவன்' என்ற படத்தை சீமான் இயக்கப் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அந்த படம் நடக்கவில்லை. அதன் பின்னர் சிம்புவை வைத்து அந்த படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதுவும் அடுத்தக் கட்டத்துக்கு செல்லவில்லை.
இந்நிலையில் தற்போது 2026 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் முடிந்ததும் சிம்புவை வைத்து பகலவன் படத்தை இயக்கவுள்ளதாக சீமான் சமீபத்தில் தெரிவித்துள்ளார். மேலும் சிம்பு குறித்துப் பேசும்போது “சிம்பு மீது எனக்கு அன்புண்டு. அவர் பெரிய உச்சத்தைத் தொட்டிருக்க வேண்டும். ஆனால் அவர் கவனத்தை சிதறவிட்டு விட்டார். விஜய்க்காக நான் எழுதிய பகலவன் கதையில் அவரை வைத்து இயக்குவேன்” எனக் கூறியுள்ளார்.