திங்கள், 20 அக்டோபர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 18 அக்டோபர் 2025 (09:17 IST)

அந்த நடிகர்தான் என் ஃபேவரைட்… அவருடன் இணைந்து நடிக்கவேண்டும்- ருக்மிணி வசந்த் ஆசை!

அந்த நடிகர்தான் என் ஃபேவரைட்… அவருடன் இணைந்து நடிக்கவேண்டும்- ருக்மிணி வசந்த் ஆசை!
சமீபகாலமாக இந்திய சினிமாவில் கன்னட நடிகைகள் கோலோச்சுகிறார். ஸ்ரீநிதி ஷெட்டி, ராஷ்மிகா மந்தனா, பூஜா ஹெக்டே என நீளும் இந்த வரிசையில் சமீபத்தில் இணைந்துள்ளார் ருக்மிணி வசந்த். கன்னடத்தில் வெளியான ‘சப்த சாகரடாச்சோ எல்லோ’ படம் மூலமாக கன்னட சினிமா தாண்டியும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் ருக்மிணி.

தற்போது காந்தாரா படம் அவரை இந்தியா முழுவதும் பிரபலப்படுத்தியுள்ளது. இதனால் சில ஆண்டுகளாக ராஷ்மிகாவை ‘நேஷனல் க்ரஷ்’ என அழைத்து வந்த ரசிகர்கள் தற்போது அதை ருக்மிணிக்கு வழங்கியுள்ளனர். தன்னை நேஷனல் கிரஷ் என அழைப்பது பற்றி ருக்மிணி பேசியுள்ளார். இதன் மூலம் அவருக்கு அனைத்து மொழிகளில் இருந்தும் வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த நேர்காணலில் அவருக்குப் பிடித்த நடிகர் யார் என்பது குறித்துப் பேசியுள்ளார். அதில் “எனக்கு ‘நேச்சுரல் ஸ்டார்’ நானியை மிகவும் பிடிக்கும். அவரோடு இணைந்து நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு உள்ளது’ எனக் கூறியுள்ளார்.