இவ்ளோ பண்ணியும் மண்ட மேல இருக்க கொண்டைய மறந்துட்டாங்களே… காந்தாரா படத்தின் தவறைக் கண்டுபிடித்து ட்ரோல் செய்யும் ரசிகர்கள்!
காந்தாரா படம் அடைந்த இமாலய வெற்றியை அடுத்து மூன்று ஆண்டுகள் உழைப்பில் 125 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான காந்தாரா 1 திரைப்படம் அக்டோபர் 2 ஆம் தேதி ரிலீஸாகி இதுவரை 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து அசத்தி வருகிறது.
காந்தாரா கதைக்களம் நடக்கும் பல ஆண்டுகளுக்கு முன்னர் நடக்கும் கதைதான் இந்த பாகத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதனால் அரங்க அமைப்பு முதல் ஆக்ஷன் காட்சிகள் வரை அந்த காலகட்டத்தில் எப்படி இருக்குமோ அப்படி பார்த்து பார்த்து செதுக்கியுள்ளனர் என்ற பாராட்டு படத்துக்குக் கிடைத்துள்ளது.
ஆனால் இவ்வளவு திறன்பட வேலை செய்தும் காந்தாரா படக்குழுவினர் செய்த ஒரு சிறு தவறால் தற்போது படக்குழு இணையத்தில் கேலிக்குள்ளாகியுள்ளது. படத்தில் 1000 ஆண்டுகளுக்கு முன்பு கதை நடக்கும் காலகட்டத்தில் ஒரு பாடல் காட்சியில் மக்கள் அமர்ந்து சாப்பிடும் ஒரு காட்சியில் தற்போதைய 20 லிட்டர் வாட்டர் கேன் ஒன்று இடம்பெற்றுள்ளது. அந்த காலத்தில் ஏது பிளாஸ்டிக் வாட்டர் கேன் என்று தற்போது அந்த ஸ்க்ரீன் ஷாட்டைப் பகிர்ந்து ட்ரோல் செய்து வருகின்றனர்.