ராமர் கோவில் திறப்பு விழா: அயோத்தி புறப்பட்டார் நடிகர் ரஜினிகாந்த்!
ராமர் கோவில் திறப்பு விழாவில் கலந்து கொள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அயோத்தி கிளம்பியுள்ளார். முன்னதாக அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது 500 வருடங்களாக போராடி ராமர் கோயில் தற்போது தான் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த ராமர் கோவிலில் விசேஷத்தில் கலந்து கொள்வதில் தனக்கு மிகவும் மகிழ்ச்சி என்றும் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் மட்டுமின்றி பாலா திரையுலக பரப்பளங்களுக்கு ராமர் கோவில் செல்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பாலிவுட் நடிகர்களான அமிதாப் பச்சன், அக்ஷய்குமார், அஜய் தேவ்தான், அனுபம் கேர், சன்னி தியோல் மற்றும் கங்கனா ரனாவத் ஆகியோர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல தென்னிந்திய நடிகர்களான மோகன்லால், ரிஷப் ஷெட்டி, ராம்சரண் தேஜா, பிரபாஸ், அல்லு அர்ஜுன் போன்றவர்களுக்கும் ரஜினிகாந்த், தனுஷ் காமெடி நடிகர் தனுஷ், பாடகர் உன்னிகிருஷ்ணன் ஆகியோர்களுக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் கிரிக்கெட் பிரபலங்களான சச்சின் தெண்டுல்கர், விராட் கோலி, அஸ்வின் உள்ளிட்டோர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Edited by Siva