திங்கள், 16 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 6 பிப்ரவரி 2024 (17:05 IST)

பிரபாஸின் 'கல்கி ஏடி 2898' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

Kalki 2898 AD 2024
பிரபாஸின் 'கல்கி ஏடி 2898' படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு இன்று அறிவித்துள்ளது.

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் பிரபாஸ். இவர் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கும் படம் பிராஜக்ட் கே. இப்படத்தில்  கமல்ஹாசன் வில்லனாக நடித்துள்ளார்.

இப்படத்தில் கமல், பிரபாஸுடன் இணைந்து, பசுபதி, தீபிகா படுகோன், அமிதாப் பச்சன் உள்ளிட்ட நடிகர்கள் நடித்து வருகின்றனர்.

'கல்கி ஏடி 2898' எனப் பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் கடந்தாண்டு, அமெரிக்காவில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.

இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஜனவரி 12, 2024 என அறிவிக்கப்பட்டு, இந்த தேதியில் படம் ரிலீஸாக வாய்ப்புகள் இல்லை என எனத் தகவல் வெளியானது.

இந்த நிலையில், 'கல்கி ஏடி 2898' படத்தில் ரிலீஸ் தேதியை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி,  பேண்டஸி திரில்லர் பாணியில்  உருவாகியுள்ள இப்படம் வரும் மே மாதம் 9 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் ரிலீஸாகும் என அறிவித்து, பிரபாஸின் புதிய போஸ்டரை ரிலீஸ் செய்துள்ளது.

இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கல்கி படத்தின் முதல் பாகத்தின் ஷூட்டிங் மொத்தத்தையும் கமல்ஹாசன் நிறைவு செய்தது குறிப்பிடத்தக்கது.