வியாழன், 12 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Updated : புதன், 4 செப்டம்பர் 2024 (09:51 IST)

மலையாள நடிகர் சங்கத்தினர் முதுகெலும்பு இல்லாதவர்கள்: நடிகை பத்மபிரியா

மலையாள நடிகர் சங்கத்தில் உள்ளவர்கள் முதுகெலும்பு இல்லாதவர்கள் என்று நடிகை பத்மப்பிரியா ஆவேசமாக விமர்சனம் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மலையாள நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஹேமா கமிஷன் அறிக்கையில் கூறப்பட்டிருந்த நிலையில் இந்த அறிக்கை மலையாள திரையுலகில் பெரும் புயலை கிளப்பி உள்ளது. பல முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீது நடிகைகள் தொடர்ச்சியாக பாலியல் குற்றச்சாட்டுகள் கூறிய நிலையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் மலையாள திரை உலகமே பரபரப்பில் உள்ளது.

இந்நிலையில் மலையாள நடிகர் சங்கத்தின் தலைவர் மோகன்லால் உட்பட அந்த சங்கத்தில் உள்ள அனைத்து நிர்வாகிகளும் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்துள்ள நிலையில் இது குறித்து நடிகை பத்மப்ரியா கூறிய போது மலையாள நடிகர் சங்க நிர்வாகிகள் முதுகெலும்பு இல்லாதவர்கள் என்று கூறியுள்ளார்.

நான்கரை ஆண்டுகளுக்கு மேலாக ஹேமா கமிஷன் அறிக்கை மறைத்து வைக்கப்பட்டுள்ளது என்றும் யாருக்காக வெளியிடாமல் மௌனம் காக்கப்பட்டது என்பது குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

பாலியல் விவகாரத்தில் மலையாள நடிகர் சங்க நிர்வாகிகள் அனைவரும் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்ததை பார்க்கும் போது அவர்களுக்கு முதுகெலும்பு இல்லை என்பது மட்டுமின்றி பொறுப்பேற்ற முறையில் நடந்து கொண்டுள்ளனர் என்றும் நடிகை பத்மப்ரியா விமர்சனம் செய்துள்ளார். அவரது இந்த விமர்சனம் மலையாள திரை உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva