பிரபுதேவா & ரஹ்மான் இணையும் ‘Moon walk’ திரைப்படத்தின் ரிலீஸ் உரிமையைக் கைப்பற்றிய பிரபலம்!
இந்தியத் திரையுலகில் பல சாதனைகளை தங்கள் இசையாலும் நடனத்தாலும் நடத்திய ஆளுமைகளான AR ரஹ்மானும், பிரபு தேவாவும் 28 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மூன்வாக் என்ற திரைப்படத்தின் மூலம் இணைந்துள்ளனர். இந்த படத்தை தமிழினின் முன்னணி ஆன்லைன் ஊடகமான பிஹைண்ட்வுட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த படத்தை பிஹைண்ட்வுட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் இயக்குகிறார். ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகும் இப்படத்தில், நடிகர்கள் பிரபு தேவா, யோகி பாபு, அஜு வர்கீஸ், அர்ஜுன் அசோகன், சாட்ஸ், நிஷ்மா மற்றும் சுஷ்மிதா ஆகியோருடன் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் பலர் இணைந்து நடிக்கிறார்கள்.
தற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் விநியோக உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் கைப்பற்றியுள்ளார். இது சம்மந்தமான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிஹைண்ட்வுட்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.