செவ்வாய், 28 அக்டோபர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 15 ஆகஸ்ட் 2025 (11:33 IST)

பிபாஷா பாஸு ஆண்கள் போல உள்ளார்… கிண்டல் அடித்த மிருனாள் தாக்கூர்…!

பிபாஷா பாஸு ஆண்கள் போல உள்ளார்… கிண்டல் அடித்த மிருனாள் தாக்கூர்…!
பாலிவுட் நடிகையான மிருனாள் தாக்கூர் சீதாராமம் திரைப்படம்  மூலமாக தென்னிந்திய ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனார். தெலுங்கில் உருவான அந்த திரைப்படம் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் ஹிட் ஆகி ஆகியதால் ஒரே படத்தில் தென்னிந்தியா முழுவதும் பிரபலம் ஆனார்.

அதையடுத்து தென்னிந்திய மொழிகளில் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க கமிட்டாகி வருகிறார். இதற்கிடையே சமீபத்தில் அவர் தனுஷை டேட் செய்வதாகப் பரவிய வதந்தியால் மேலும் பிரபலமடைந்தார். இந்நிலையில் தற்போது பாலிவுட் முன்னணி நடிகையான பிபாஷா பாஸுவைக் கிண்டலடித்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

சமீபத்தில் “பிபாஷா பாஸுவின் தசைகள் ஆண்கள் போல வலுவாக உள்ளன. அவரை விட நான் சிறந்தவள்” எனப் பேசி சர்ச்சையைக் கிளப்பினார். இதற்குப் பதிலளித்துள்ள பிபாஷா பாஸு “வலிமையான பெண்கள் அனைவரையும் தூக்கி விடுவார்கள். அழகான பெண்களே உங்கள் தசைகளை வலிமையாக்கிக் கொள்ளுங்கள். அதுவும் பெண்களுக்கு அழகுதான். பெண்கள் உடல்ரீதியாக வலிமையாக இருக்கக் கூடாது என்ற முட்டாள்தனமாக சிந்தனையைத் தூக்கிப் போடுங்கள்” எனப் பதிலடி கொடுத்துள்ளார்.