நான் தனுஷை காதலிக்கின்றேனா? நடிகை மிருணாள் தாக்கூர் பதில்..!
நடிகர் தனுஷ் மற்றும் நடிகை மிருணாள் தாக்கூர் இருவரும் காதலித்து வருவதாக சமூக வலைத்தளங்களில் பரவி வந்த வதந்திகளுக்கு, நடிகை மிருணாள் தாக்கூர் தனது சமீபத்திய நேர்காணலில் பதிலளித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ், 'இட்லி கடை', 'தேரே இஸ்க் மெயின்' உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார். தற்போது விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனது 54வது படத்தில் நடித்து வருகிறார்.
இந்த சூழலில், சமூக வலைத்தளங்களில் தனுஷுக்கும் மிருணாள் தாக்கூருக்கும் காதல் இருப்பதாக வதந்திகள் பரவின. மிருணாள் நடித்த 'சன் ஆஃப் சர்தார் - 2' படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் தனுஷ் கலந்துகொண்டதே இந்த வதந்திகளுக்கு முக்கிய காரணமாக கூறப்பட்டது.
இது குறித்து பேசிய மிருணாள் தாக்கூர், "நானும் தனுஷும் காதலிப்பதாகப் பரவும் செய்திகளை பார்க்கும்போது சிரிப்பாக உள்ளது. நடிகர் அஜய் தேவ்கனின் அழைப்பின் பேரில் அவர் அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். நானும் தனுஷும் நல்ல நண்பர்கள் மட்டுமே, இதை தாண்டி எங்களுக்குள் வேறு எந்த தொடர்பும் இல்லை" என்று விளக்கமளித்துள்ளார்.
இந்த விளக்கத்தின் மூலம், இருவருக்கும் இடையே நிலவி வந்த காதல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.
Edited by Mahendran