வியாழன், 12 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 26 ஜூலை 2021 (22:18 IST)

’’சிங்கப்பெண்’’ மீராபாய் சானுக்கு வாழ்நாள் முழுதும் இலவச பீட்சா !

இந்தியாவில் வீரமங்கையாக எல்லோரது மனதிலும் இடம்பிடித்துள்ள மீராபாய் சானுவுக்கு வாழ்நாள் முழுவதும் இலவச பீட்சா வழங்க முடிவெடுத்துள்ளதாக டாமினோஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஜப்பானில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவை சேர்ந்த மீராபாய் சானு என்பவர் வெள்ளிப்பதக்கம் வென்றார் என்பதும் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்று டோக்கியோவில் இருந்து டெல்லி விமான நிலையத்திற்கு வந்த மீராபாய் சானுவை பலர் வரவேற்றனர். இந்த நிலையில் மணிப்பூர் அரசு சற்று முன் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் மீராபாய்க்கு காவல்துறையில் ஏஎஸ்பி பதவி வழங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்தியாவில் வீரமங்கையாக எல்லோரது மனதிலும் இடம்பிடித்துள்ள மீராபாய் சானுவுக்கு வாழ்நாள் முழுவதும் இலவச பீட்சா வழங்க முடிவெடுத்துள்ளதாக டாமினோஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து டாமினோஸ் நிறுவனம் அறிவித்துள்ளதாவது: சமீபத்தில் மீராபாஉ நீண்ட நாட்களாக பீட்சா ஒன்றை சாப்பிட வேண்டுமென ஒரு பேட்டியில் மீராபாய் சானு தெரிவித்தார். இதைப் பார்த்த டாமினோ நிறுவனம் இந்தியாவில் வீரமங்கையாக எல்லோரது மனதிலும் இடம்பிடித்துள்ள மீராபாய் சானுவுக்கு வாழ்நாள் முழுவதும் இலவச பீட்சா வழங்க முடிவெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.