வெள்ளி, 3 அக்டோபர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 30 செப்டம்பர் 2025 (08:24 IST)

கரூர் துயர சம்பவம்… சென்னையில் நடக்க இருந்த ப்ரமோஷன் நிகழ்ச்சி ரத்து!

கரூர் துயர சம்பவம்… சென்னையில் நடக்க இருந்த ப்ரமோஷன் நிகழ்ச்சி ரத்து!
காந்தாரா படம் பெற்ற பெருவெற்றிக்குப் பிறகு தற்போது இரண்டாம் பாகம் ‘காந்தாரா-1’ உருவாகி ரிலீஸாகவுள்ளது. படத்துக்கு காந்தாரா –சேப்டர் 1 எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. காந்தாரா படம்தான் இரண்டாம் பாகம். இதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னர் நடக்கும் கதைதான் அடுத்த பாகத்தில் சொல்லப்பட்டுள்ளது. இந்த படத்தில் காந்தாரா தெய்வத்தின் பின்னணி பற்றி சொல்லப்பட்டுள்ளது.

சமீபத்தில் ஐந்து மொழிகளில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இதையடுத்துப் படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் இயக்குனரும் நடிகருமான ரிஷப் ஷெட்டி ஈடுபட்டு வருகிறார். அப்படி ஒரு நிகழ்ச்சியில் காந்தாராவுக்காக தான் ஐந்து ஆண்டுகள் செலவிட்டதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நாளை மறுநாள் படம் ரிலீஸாகவுள்ள நிலையில் இந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சி இன்று சென்னையில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இரு தினங்களுக்கு முன்னர் கரூரில் விஜய் கலந்துகொண்ட கட்சிப் பிரச்சாரத்தில் 39 பேர் கூட்டநெரிசலில் சிக்கி மரணமடைந்த நிலையில் காந்தாரா படக்குழு இன்றைய நிகழ்ச்சியை ரத்து செய்துள்ளது.